எழுத்துக்களா? எழுத்துகளா?
வணக்கம், இதற்கு முன் எழுதிய கட்டுரையைச் சரி பார்க்கும் பொழுது எனக்கு ஏற்பட்ட பெரிய ஐயம், எழுத்துக்கள் சரியா? இல்லை எழுத்துகள் சரியா? அதைப் பற்றித் தேடலாம் என்று இணையத்தில் சிறிது நேரம் செலவிட்டேன். தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன். அதை உங்களின் பார்வைக்கும் வைக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் எழுதியதே இந்த க் கட்டுரை. தமிழில் 'கள்' தவிர வேறு பல விகுதிகள் இருந்தாலும், 'கள்' விகுதி பெரும்பான்மையான இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'கள்' என்பது பன்மை விகுதியாகும். இவ்விகுதி எவ்வாறு தமிழில் பயன்பாட்டுக்கு வந்தது, பின்பு அதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றி இங்கு காணலாம்.