தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3
வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு புறநானுற்றுப் பாடலுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம். 1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான படம் 'இருவர்' . தமிழக அரசியலில் இரு துருவங்கள் என்று சொல்லக் கூடிய திரு. கருணாநிதி மற்றும் திரு. எம் . ஜி. இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கையை த் தழுவி இயக்குநரின் சிறு கற்பனையைத் தூவி மிகவும் துணிச்சலோடு எடுக்கப்பட்ட படமே இருவர்.