தும்முறது ஒரு குத்தமா?
வணக்கம், இணையர்களுக்கிடையில் வரும் ஊடலுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம் . தும்மல் ஒரு காரணாமாக இருக்க முடியுமா? இவ்வினாவைக் கேட்டு நீங்கள் சற்று வியப்படையலாம். காதலிக்கும் ஒரு ஆண்மகனிடம் கேளுங்கள், அவன் கூறுவான் தம்மிடம் ஊடல் கொள்ள வேண்டும் என்று தனது காதலி முடிவு செய்துவிட்டால் தும்மல் என்ன, அவன் விடும் மூச்சுக் காற்றை வைத்துக் கூட ஊடல் கொள்வாள் என்பான். இதற்குச் சான்றாக இரு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நிகழ்ச்சி 1: தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டிருக்கும் ஒரு பொழுது அது . தலைவியை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் தலைவன் . அந்த நேரத்தில் அவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மலின் போது, ஒரு நொடிப் பொழுது நெஞ்சம் நின்று மீண்டும் துடிக்கும் என்பதால் ஒருவர் தும்மினால் 'நூறாண்டு வாழ்க', 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துக் கூறும் வழக்கம் உள்ளது. தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கும் பொழுதில் தும்மல் வந்து விடவே, நம்மை வாழ்த்தும் பொழுதாவது தலைவி நம்மிடம் பேசுவாள் என்று ஆவலுடன் இருந்தான் தலைவன். தலைவன் எண்ணியவாறே தலைவியும் அவனை ...