Posts

Showing posts from July, 2020

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!

Image
திரு. மணிரத்தினம் இயக்கி, ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் வரும் 'நல்லை அல்லை' பாடலைக் கேட்ட பொழுது என் மனதில் ஓடிய எண்ணங்களை இங்குப் பதிவிடுகிறேன். முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே, முகந்தொட காத்திருந்தேன்..! மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய், மணம் கொள்ள காத்திருந்தேன்..! மகரந்தம் தேடி நுகரும் முன்னே, வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..! முகை - அரும்பு நிலையில் இருந்து வெளியில் வந்து நனைந்து ஈரத்தோடு இருக்கும் நிலை முகிழ்

முளைப்பாரி

Image
வணக்கம், ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஆடித் தள்ளுபடி, ஆடிக் காற்று, மாரியம்மன் கோவில் திருவிழா, உடலை க் குளிர்விக்கும் கம்பங்கூழ், இன்னபிற, இன்னபிற. குறிப்பாக ஊர் திருவிழா, கோவில் திருவிழா என்றாலே தனி மகிழ்ச்சி தான். இக்கட்டுரையில் நாம் காண இருப்பது ஆடித்திருவிழாவில் செய்யக் கூடிய முளைப்பாரி என்ற சடங்கு பற்றியே. இவ்வுலகில் மனிதனுக்கும் மேலான ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை மனிதருள் பலர்  நம்புகின்றனர். இதனை மனதில் கொண்டு, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிராம தெய்வங்களுக்கு த் திருவிழா நடைபெறும். அதில் ஆடி மாதம் பிறந்துவிட்டால் அம்மனுக்குத் திருவிழாக்கோலம் தான். பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பதென்பது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

Image
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க்குடி!! இந்த வரிகளை பல தலைவர்கள் மேடையில் கூறும் பொழுது, நாம் அனைவரும் அதை நமது மொழியின் பெருமையை எடுத்துரைக்கிறார்கள் என்று மெய்சிலிர்த்து கைத்தட்டுக்களைத் தந்திருக்கிறோம். பின் சிந்தித்துப் பார்த்தால், கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே எப்படித் தமிழ்க்குடி தோன்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு வந்திருக்கலாம்.   நிலம் தோன்றி, மக்கள் தோன்றி, அவர்களின் உணர்வுகளைப் பரிமாறுவதற்கு உருவாக்கப்பட்டதே மொழி. அவ்வாறு இருப்பின் மேற்ச்சொன்ன வரிகள் எதிர்மறையாக இருக்கிறதே? இதைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள அந்த முழுப் பாடலையும் அகழ்ந்து, ஆய்ந்து பார்த்து அதிலுள்ள பொருளை நாம் அறியலாம். அதற்கு முன், இவ்விரு வரிகளின் பொருளை ஒரு போன்மி(meme என்பதன் தமிழாக்கம்) வாயிலாகக் காண்போம்.