ஏன் அவ்வாறு விளித்தாய் பாரதி?
எட்டயபுரத்தில் பிறந்து தனது கவிதைகளாலும், பாட்டுக்களாலும் , கட்டுரைகளாலும் மக்கள் மனத்தில் விடுதலை உணர்வை விதைத்தவர் பாரதி. "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று விடுதலை அடைவதற்கு முன்னே உரக்கப் பாடியவர். அன்று முதல் இன்று வரை பாரதியின் படைப்புக்களைப் படித்தால் நமக்குள் எழும் உணர்வு ஒரு தனி சுகம். இருந்தும் பலருக்குப் பாரதியின் மேல் சில வருத்தங்கள் உண்டு. ஏன் எனக்கும் சில வருத்தங்கள் இருந்தன. " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" , என்று கூறிய பாரதி ஒரு இடத்தில் "ஈனப் பறையர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏன் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று இவர் மேல் பல விமர்சனங்கள் உள. இப்பொழுது நாம் அதை விளக்கமாகப் பார்ப்போம்.